விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் ஐந்து அறைகள் எரிந்து தரைமட்டாகின.
வச்சக்கரப்பட்டி அருகே உள்ள வி.முத்துலிங்கபுரத்தில் காளிராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 40 அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
இன்று காலை வழக்கம்போல் பட்டாசுகள் தயாரிக்கும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது புற்களை சுத்தம் செய்ய கொண்டுவரப்பட்ட டிராக்டர் எதிர்பாராத விதமாக பட்டாசு அறையில் மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த விருதுநகர் மற்றும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஆலையின் 5 அறைகள் எரிந்து தரைமட்டாகின.