ஜப்பானிய தொழில்நுட்பமான மியாவாகி முறையில் அமைக்கப்பட்டு வரும் அடர்வனங்களை, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக பசுமைப் போர்வையை அதிகரிக்கும் விதமாகவும், காற்று மாசுவை குறைக்கும் விதமாகவும், ஜப்பானிய தொழில் நுட்பமான மியாவாகி முறையில், முதற்கட்டமாக 20 இடங்களில் அடர்வனம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை அடையாறு, காந்தி நகர், கெனால் பாங்க் சாலையில், 20 லட்ச ரூபாய் செலவில், சுமார் 23,800 சதுர அடி பரப்பளவில், நீர் மருது, பூவரசு,வேம்பு உள்ளிட்ட 2,400 பாரம்பரிய மரக் கன்றுகள் நடும் திட்டத்தை, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.