கோவையில் ரூகோஸ் வெள்ளை ஈயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வேளாண்மை இணை இயக்குநர் சித்ரா தேவி தலைமையிலான குழு நேரில் ஆய்வு செய்தது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக உள்ளதாக கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்திருந்தனர். அதன் பேரில் கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சித்ரா தேவி தலைமையில் கோவை வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயராஜ் நெல்சன், ஆழியாறு தென்னை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி அழகர், நோயியல் துறை விஞ்ஞானி உஷா மாலினி ஆகியோர் விவசாயிகளுடன் கலந்தாலோசித்தனர். பின்னர் ரூகோஸ் வெள்ளை ஈயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை நேரில் பார்வையிட்டனர். இதனையடுத்து தென்னை விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விஞ்ஞானி அழகர் விளக்கமளித்தார்.
((கிணத்துக்கடவு, கோவை