குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடிக்க வீரர்களுக்குப் செயல்முறை விளக்கம்

குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது குறித்த மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

எழும்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சியில் தேசிய பாம்புகடி அமைப்பை சேர்ந்த இயக்குனர் ஷியாமளா மற்றும் ராபின்சன் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்குப் பயிற்சிகளை வழங்கினர். குடியிருப்பு பகுதிகளில் புகும் பாம்புகளை எவ்வாறு கையாள்வது, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி அவற்றை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பன குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும்  உலகளவில் பாம்புகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பாம்புகள் தொடர்பான ஆவணப்படமும் திரையிடப்பட்டது.

Exit mobile version