சூரியகாந்தி பூக்களின் விளைச்சலை அதிகரிக்க விவசாயிகளுக்கு விளக்கம்

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த சாம்பவர்வடகரை பகுதிகளில் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். சூரியகாந்தியின் வயது 80 முதல் 85 நாட்களாகும். சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் அட்வான்ஸ் கார்கில், கே.பி.எஸ்.எச்.1, மாடர்ன் போன்ற வகைகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி பூவானது, பூக்களாக ஏற்கக்கூடிய பருவத்தில் உள்ளது. இந்த தருணத்தில் செய்ய வேண்டிய வேளாண் சம்பந்தமான அறிவுரைகள் மற்றும் மகசூலை அதிகரிக்கும் விதம் குறித்து தமிழக அரசின் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Exit mobile version