திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசினர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காவலன் செயலி பயன்படுத்தும் முறை குறித்து மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் ஆண்டு விழா, தமிழவை விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வத்தலக்குண்டு காவல் ஆய்வாளர் பிச்சைப்பாண்டியன் நாட்டில் பெண்களின் பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்தாகவும், அதற்காக தமிழக காவல்துறை நாடு முழுதும் காவலன் செயலியை அறிமுகப்படுத்தியதாகவும், அதனை நகர்புற பெண்கள் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், கிராமப்புற மாணவிகளும் அதனை பயன்படுத்த வேண்டும் எனவும், இது குறித்து கிராமப்புற பெண்களிடம் எடுத்துரைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்சிகளும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுசான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் பேராசிரியர்கள் மாணவர்கள் என 1500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.