மருத்துவக்கல்லூரியில் மனித உறுப்புகளின் செயல் விளக்க கண்காட்சி

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் மருத்துவ கண்காட்சி அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் மனித உறுப்புகள் இயங்கும் விதம் பற்றியும், அதன் மாதிரிகள் குறித்தும் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதை புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சிவகங்கை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர். இந்த கண்காட்சிகளில் வைக்கப்பட்டிருக்கும் மாதிரிகள் குறித்து விளக்க, 3 ஷிப்ட்களிலும் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர்கள் தயார் நிலையில் இருப்பதாக அக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவ, மாணவிகளிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக,தமிழக அரசு இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version