கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால், திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் என்றும் இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்தார்.
கோவையில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடுத் தொகை வழங்குதல், புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் நாட்டு கோழி குஞ்சு வளர்ப்பு திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையினை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால் திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் என்றும் இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறினார்.