நாய்கள் கண்காட்சியில் பங்கேற அசத்திய நாய்கள்

திருச்சியில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதைதடுப்பு சங்கம் சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

தென்னூர் அருகேயுள்ள பொருட்காட்சி மைதானத்தில், அரசின் திட்டங்கள், சாதனைகள், மற்றும் கொள்கை குறிப்புகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ள அரசு பொருட்காட்சி கடந்த மாதம் 4-ம் தேதி துவங்கியது. இதில் செல்ல பிராணிகளின் வளர்ப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியை, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி துவக்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை உள்ளிட்ட நாட்டு இன நாய்களும், லேப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்டு, பொமரேனியன், பக், டாபர்மேன், உள்ளிட்ட வெளிநாட்டு இன நாய்கள் என 50-க்கும் மேற்பட்ட நாய்கள் இடம்பெற்றன. கண்காட்சியில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இரயில்வே பாதுகாப்புபடை, மோப்பநாய் பிரிவை சேர்ந்த நாய்களின் வீர தீர சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Exit mobile version