திண்டுக்கல் அருகே சேவல் இனத்தைப் பாதுகாக்கும் விதமாக கண்காட்சி

திண்டுக்கல் அருகே அழிந்து வரும் சேவல் இனத்தை பாதுகாக்கும் விதமாக 500-க்கும் மேற்பட்ட பல்வேறு வகை சேவல்களின் கண்காட்சி நடைபெற்றது. திண்டுக்கல் அடுத்துள்ள குட்டியபட்டியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 5-வது ஆண்டாக சேவல் வளர்ப்பு நண்பர்கள் சார்பில், சேவல்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து மயில் வகை சேவல், கிளிமூக்கு சேவல், உச்சி பூ சேவல், கருங்கீரி சேவல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட சேவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த கண்காட்சியில் 5000 ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை, சேவல்குஞ்சுகள் விற்பனை செய்யப்பட்டன. இதில் சிறந்த 100 சேவல்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அழிந்து வரும் சேவல் இனத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.

Exit mobile version