திருப்பூரில் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நவீன இயந்திரங்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
திருப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான இயந்திரங்களின் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில் இந்தாண்டும் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் கண்காட்சி தொடங்கி உள்ளது. பின்னலாடை உற்பத்திக்கு தேவையான பிரிண்டிங்க், டெய்லரிங்க், வாசிங் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் 300க்கும் மேற்பட்ட அரங்குகள் இதில் இடம்பெற்றுள்ளன. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியினை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக துணை தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தார்.