பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் நடந்த நாய்கள் கண்காட்சி

பிராணிகள் வதைத் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் நாய்கள் கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், பிராணிகள் வதை தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாய்கள் கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சிகள், திருச்சியில் உள்ள அரசு பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை உள்ளிட்ட நாட்டின நாய்களும், கிரேடன், டால்மேஷன், ஜெர்மன் ஷெப்பர்ட், பாக்ஸர், மினியெச்சர் உள்ளிட்ட 15 வகை அயல்நாட்டின நாய்கள் என மொத்தம் 18 வகையில், 58 நாய்கள் பங்கேற்றன. நெருப்பு வளையம் தாண்டுதல், தடை தாண்டுதல், வெடிபொருட்களை கண்டறிதல் போன்ற சாகசங்களில் நாய்கள் ஈடுபட்டதை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

Exit mobile version