உதகையில் பழங்கால நாணயங்கள் ரூபாய் நோட்டுகளின்

உதகை அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற பழங்கால நாணயங்கள், மற்றும் ரூபாய் நோட்டுகளின் கண்காட்சியை ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். உதகை அரசு கலை கல்லூரியில் பழங்கால நாணய கண்காட்சி நடைபெற்றது. இதில் இந்தியாவில், மன்னர்கள் காலத்தில், புழக்கத்தில் இருந்த நாணயங்கள், ஆங்கிலேயர் வருகைக்குப் பின் இருந்த ரூபாய் நோட்டுகள் சுதந்திர இந்தியாவிற்கு பின், அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு நாணயங்கள் மற்றும், ரூபாய் நோட்டுகளுடன், பத்திரங்கள் ஆகியவையும் இடம் பெற்றன.

இவை தவிர, பல்வேறு நாடுகளின், பழங்கால கரன்சிகள், நாணயங்கள், தபால் தலைகளும் இடம்பெற்றிருந்தது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

Exit mobile version