மு.க.ஸ்டாலின் மேடை அருகே பணப்பட்டுவாடா…

சென்னையில் மு.க. ஸ்டாலினின் மேடை அருகிலேயே திமுகவினர் முழு வீச்சில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட பிரத்யேக காட்சிகள் நியூஸ் ஜெ. தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளன. சென்னை பெரம்பூர் பகுதியில், சென்னை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் ஆர்.டி.கே. சேகர் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரது மேடைக்கு அருகிலேயே பல இடங்களில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பண விநியோகம் செய்தனர்.

கூட்டத்தின் துவக்கத்தில், மறைவான இடத்தில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில், நேரம் செல்ல செல்ல பொது வெளியிலேயே பண விநியோகத்தில் திமுக நிர்வாகிகள் ஈடுபட தொடங்கினர். பண விநியோகம் தொடர்பாக நிர்வாகிகள் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

Exit mobile version