அரியலூர் திருமானூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 650 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. அரசுகொறடா தாமரை ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கிவைத்த இந்த போட்டியில் அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 650 காளைகள், 300க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர். வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்கினர். இதையடுத்து வெற்றிபெற்ற மாடுபிடிவீரர்கள் மற்றும்காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள், கட்டில், சோபா உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானவர்கள் கண்டுரசித்தனர்
Discussion about this post