கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் நிறுத்தம்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து தொடர்ந்து 2வது நாளாக 700 கன அடியாக நீடித்து வருகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டதால், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. எனவே, பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவிக்கு இரண்டாவது நாளாக 700 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

நீர்வரத்து குறைந்த போதிலும், மெயினருவி, மற்றும் நடைபாதையில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 195-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version