அகழாய்வில் விலங்கின் முழுமையான எலும்புகள் கண்டெடுப்பு!

கீழடியில் நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வு பணியில்  விலங்கின் எலும்புகள் முழு அமைப்பில் கிடைக்க பெற்றுள்ள நிலையில், அது என்ன விலங்கு என்பதை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.தமிழக தொல்லியில் துறை சார்பாக, பிப்ரவரி 19ம் தேதியில் இருந்து கீழடியில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொந்தகை, மணலூர், அகரம், கீழடி ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், தற்போது நடந்து வரும் 6ம் கட்ட அகழாய்வின் போது, விலங்கினுடைய  எலும்புகள் முழு அமைப்பில் கிடைக்கப் பெற்றன. இதையடுத்து, அந்த விலங்கு குறித்து அறிந்து கொள்ள தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஆய்விற்கு பிறகு இது எந்த வகை விலங்கு என்பதும், எத்தனை வருடங்களுக்கு முந்தைய விலங்கு என்பதும் தெரியவரும். ஏற்கனவே நடைபெற்ற நான்காம் கட்ட அகழாய்வு பணியின் போது, திமில் உள்ள காளையின் எலும்புகள் கண்டறியப்பட்டது.
 

Exit mobile version