நாளை தேசிய திறனாய்வு தேர்வு – 1.59 லட்சம் பேர் பங்கேற்பு

மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி மேற்படிப்பு வரை மாணவர்கள் தங்குதடையின்றி கல்வியை தொடர வசதியாக மத்திய அரசு சார்பில் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான முதல் நிலை தேர்வு நாளை நடைபெற உள்ளது. தமிகத்தில் 500-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒரு லட்சத்து 59 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

மாணவர்கள் தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வர வேண்டும் என்று அரசு துறை தேர்வு இயக்குநர் கூறியுள்ளார்.

Exit mobile version