எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி பவானி சங்கர் இல்ல திருமணம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடைபெற்றது.
தென் சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பவானி சங்கரின் மகன் சதீஷ் மற்றும் தீபிகா திருமணம் மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடைபெற்றது. அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட ஏராளமானோர் திருமண விழாவில் கலந்து கொண்டனர். மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் ஆசியோடு திருமணம் நடந்ததாக மணமக்கள் பெருமிதம் தெரிவித்தனர்.