ஏப்ரல் 13ம் தேதிக்குள் ஈ.வி.எம் தயார் நிலையில் வைக்கப்படும்-சத்யபிரதா சாஹூ

ஏப்ரல் 13ம் தேதிக்குள் வாக்களிக்கும் இயந்திரம் தயார் நிலையில் வைக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறாக பேசியிருந்தால் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விசாரிக்க உத்தரவிடப்படும் என்று கூறினார். குக்கர் சின்னத்தை யாராவது கேட்டிருந்தால் பரிசீலித்து வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏப்ரல் 13ம் தேதிக்குள் வாக்களிக்கு இயந்திரம் வாக்களிக்க தயார் நிலையில் வைக்கப்படும் என்று தெரிவிததார். தமிழகத்தில் இதுவரை 54.43கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 261 கிலோ தங்கம் , 346கிலோ வெள்ளி என மொத்தம் 74.4கோடி ரூபாய் மதிப்பிலான உலோகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

Exit mobile version