தனிமைபடுத்தப்பட்டோர் உள்ள வீட்டில் அனைவரும் முக கவசம் அணியவேண்டும் – தமிழக அரசு

தனிமைபடுத்தப்பட்டவர்களின் வீட்டில் உள்ள அனைவரும் முக கவசம் அணியவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தனிமைப்படுத்தப்பட்டவருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய நல்ல காற்றோட்டமான தனி அறையை ஒதுக்கவேண்டும் என்றும், வீட்டில் உள்ள அனைவரும் முக கவசம் அணியவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமை படுத்தப்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்றும், வீட்டிலேயே அவருக்கென ஒதுக்கப்பட்ட தனி அறையில் இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது – தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உடைகள், படுக்கை விரிப்பு போன்றவற்றை உதறாமல், தனியாக சோப்பு நீரில் ஊறவைத்து துவைத்து வெயிலில் காயவைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டில் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தனிமைபடுத்தப்பட்டவருடன் தொடர்பில் இல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமைபடுத்தப்பட்டவருக்கு காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், 104 அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800 120 555 550 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு 24 மணி நேர உதவி எண்ணான 104, 1077 ஆகிய எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version