எல்லோரும் ஏழை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது : ப.சிதம்பரம்

எல்லோரும் ஏழை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அரசு கொண்டு வந்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள இடஒதுக்கீடு மசோதா குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி பேர் ஏழைகள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 சம்பளம் வாங்குபவரும் ஏழை என்பது எப்படி இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version