ஒவ்வொரு துறை செயலாளரும் தங்களை பிரதமராக நினைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து துறை செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டெல்லி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அரசு துறைகள் செயல்பட வேண்டிய விதம் குறித்து செயலாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் புதிய கொள்கையின்படி நடைமுறைகளை மாற்றி அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என்றார். அவ்வாறு செயல்படும்போது நிகழக்கூடிய நேர்மையான தவறுகளை கண்டு அதிகாரிகள் அச்சம் கொள்ள தேவையில்லை என கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அவ்வாறான சூழலில் அதிகாரிகளுடன் அரசு துணை நிற்கும் என்று தெரிவித்தார். இதனால் விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் பயப்பட தேவையில்லை என்றும் அவர் பேசினார்.