சென்னையில் மின்சாரத்தை திருடி நிகழ்ச்சி நடத்திய திமுகவினரின் கள்ளத்தனம் அம்பலமாகியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் தமிழுக்கு திருவிழா என்ற நிகழ்ச்சி திமுக சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரர் மு.க.தமிழரசு, சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காக அரசு மின் இணைப்பு பெட்டியில் இருந்து மின்சார திருட்டில் திமுகவினர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஒரு புறம் நீதி, நேர்மை என்று பேசும் திமுகவினர், மறுபுறம் அரசின் சொத்துகளை அபகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த மின்சார திருட்டு மற்றொரு உதாரணமாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கூட்டத்தை காட்டுவதற்காக பொதுமக்களுக்கு உணவு டோக்கன்கள் கொடுத்து அழைத்து வந்துள்ளனர். ஆனால் வந்தவர்கள் பலர் உணவு கிடைக்காமல் அல்லல்பட்டது தான் உண்மை.