பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஏற்கனவே பிளாஸ்டிக் வைத்திருப்பவர்கள் அதை பயன்படுத்தினால் சட்டப்படி குற்றம் என மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஸ்சேகர் தெரிவித்துள்ளார்.
மாட்டுதாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில், மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் தடை, மாசில்லா புத்தாண்டு, போகி பண்டிகை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் அனிஸ்சேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என பொதுமக்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் அனிஸ்சேகர், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சியிடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஏற்கனவே வைத்திருக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தினாலும் சட்டபடி குற்றம் என அனிஸ்சேகர் குறிப்பிட்டார்.