102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மூதாட்டி

நாகப்பட்டிணத்தில் மூதாட்டி ஒருவர் 102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைத்து வருமானம் ஈட்டி வருகிறார். வயது மூப்புக்கு ஓய்வு கொடுத்த அவரின் உழைப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆயங்குடிபள்ளம் கிராமத்த்தை சேர்ந்தவர் நீலாம்பாள். ஓலை குடிசையில் வசித்து வரும் நீலம்பாளுக்கு 17 வயதில் திருமணம் நடந்தது. அம்மை நோயினால் சிறுவயதிலேயே கணவரை இழந்த விட இரண்டு மகன்கள் மற்றும் மகளை பழ வியாபாரம் செய்து தனியாளாக போராடி வளர்த்தார். காலச்சக்கரத்தில் இரண்டு மகன்களையும் இழந்து விட்டதால் மகன் வழி பேரன் சிவாவின் வீட்டில் வசித்து வருகிறார்.

அதிகாலை வேளையிலே எழுந்து காட்டிற்கு செல்லும் அவர், கொளஞ்சி தட்டையை அறுத்து வந்து காயவைக்கிறார். தட்டை காய்ந்ததும் அதை எடுத்துக் கொண்டு போய், ஒரு கட்டு10ரூபாய்க்கு
விற்று அந்த பணத்தை வீட்டில் கொடுக்கிறார்.

நீலாம்பாள் பாட்டி காலையில் கூழ் மட்டுமே உணவாக எடுத்துக் கொள்கிறார். இரவு ஒருவேளை மட்டுமே அரிசி சாதம் சாப்பிடும் நீலம்பாள் பாட்டி, மீன் குழம்பு என்றால் விரும்பு உண்பாராம்.

தள்ளாத வயதிலும் உழைத்து வாழும் அவர் இதுவரை யாரிடமும் உதவித்தொகையோ இலவசமோ பெற்றதில்லை என கூறுகிறார்கள். குடிசை வீட்டில் வசித்து வரும் தங்கள் பாட்டிக்கு அரசு முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version