ஐரோப்பிய யூனியன் பொருட்களுக்கு வரி விதிக்க அமெரிக்காவுக்கு அனுமதி: உலக வர்த்தக அமைப்பு

ஐரோப்பிய யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 7.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரி விதிக்க உலக வர்த்தக அமைப்பு, அமெரிக்காவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

போயிங் நிறுவனத்துக்கு அமெரிக்கா அரசு சட்டவிரோதமாக மானியம் வழங்கி வருவதாக ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டியது. அதேபோல் ஏர் பஸ் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் மானியம் வழங்கி வருவதாக அமெரிக்காவும் குற்றம்சாட்டியது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், அவ்வாறு வரி விதிக்கப்பட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஐரோப்பிய யூனியனும் தெரிவித்தது. இந்நிலையில் ஐரோப்பிய யூனியனின் 7.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரி விதிக்க உலக வர்த்தக அமைப்பு, அமெரிக்காவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகப் போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா- ஐரோப்பிய யூனியன் விவகாரம் பொருளாதார சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Exit mobile version