ஈரோடு மாவட்டம் தாளவாடியில், பெட்ரோலில் எத்தனால் கலப்படம் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பெட்ரோல் விநியோகம் செய்ய தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி-ஒசூர் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் சென்னஞ்சா என்பவர் பெட்ரோல் நிரப்பி சென்றுள்ளனர். சிறிய தூரம் சென்றவுடன் அவரது இரு சக்கர வாகனம் நின்று விடவே அருகில் உள்ள ஒர்க் ஷாப்பில் விட்டுள்ளார்.
இதனையடுத்து, அவரது பெட்ரோலில் எத்தனால் திரவம் கலப்படம் செய்யப்பட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பெட்ரோலை சோதனை செய்ததில், கலப்படம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, பங்கின் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் விசாரணை முடியும் வரை பெட்ரோல்,டீசல் விநியோகம் செய்ய தடை விதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.