கங்கைகொண்டானில் புள்ளி மான்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

நெல்லை மாவட்டத்தில் தொடங்கியுள்ள, புள்ளி மான்கள் கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவர்கள், வன ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். கங்கைகொண்டானில் புள்ளி மான்களுக்கென சரணாலயம் உள்ளது. இங்கு, புள்ளி மான்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட வனத்துறை அலுவலர் திருமால் தலைமையில் வனத்துறை ஊழியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 100 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கங்கைகொண்டானில் உள்ள புள்ளி மான் சரணாலயம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், ராணி அண்ணா கல்லூரி உள்பட 5 இடங்களில் புள்ளிமான் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறுகிறது.

Exit mobile version