ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில், விலை ஏற்றத்தால், தக்காளி அழுகி வீணடைவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் வ.உ.சி பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு, கனமழை காரணமாக, கடந்த சில தினங்களாகவே தக்காளி பெட்டிகளின் வரத்து குறைந்து உள்ளது.
நாள் ஒன்றுக்கு 3 டன் அளவு வரை மட்டுமே வரத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தக்காளி விலையும் பெருமளவில் உயர்ந்துள்ளதால், சந்தைக்கு வரும் குறைந்த அளவு தக்காளிகளும் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைவதாக, வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோ தக்காளி 150 முதல் 160 ரூபாய்க்கு விற்பனை ஆவதாக கூறப்படும் நிலையில், தேக்கம் அடையும் தக்காளிகள் அழுகி, சேதம் அடைவதால், குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்…