ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளில் பெய்த கன மழையால் முந்நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கோபிச்செட்டிப்பாளையம் வட்டாரத்தில் இரவு நேரத்தில் பெய்த கன மழையால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாட்சியர் விஜயகுமார், வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களை நேரில் பார்வையிட்டார். பின்னர் சேத மதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். நீரில் முழ்கிய நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.