மத்திய அரசின் விலங்குகள் நல வாரியத்தால் பாராட்டு பெற்ற ஈரோடு ஜல்லிக்கட்டு, வரும் 18-ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் நியூஸ் ஜெ தொலைக்காட்சி இணைந்து நடத்திய ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஆண்டு மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. அதேபோல், இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில், வரும் 18ஆம் தேதி துவங்குகிறது. 2வது ஆண்டாக நடைபெறும் இந்த போட்டிக்கான முன்னேற்பாடுகள் பவளத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் சிரமம் இன்றி கண்டுகளிக்க கேலரி அமைக்கும் பணிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகளும், 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் இதில் கலந்து கொள்வார்கள் என்று ஜல்லிக்கட்டு பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post