திமுகவினரின் ஒத்துழைப்போடு சாயத்துணிகளை காவிரி ஆற்றில் அலசும் சாயப் பட்டறைகள்

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில், திமுகவினரின் ஒத்துழைப்போடு சாயப் பட்டறைகளில் இருந்து சாயத்துணிகளை இரவில் கொண்டு வந்து அலசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 5க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களில் சாயப்பட்டறை துணிகளை காவிரி ஆற்றில் அலசுவது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலில், அதிகாரிகள் வருவதை கண்டு துணிகளை ஆற்றில் போட்டுவிட்டு தப்பிய நிலையில் ஒரே ஒரு சரக்கு வாகனம் சிக்கியது.

அவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோதே, சிக்கியவரை விடுவிக்கக் கோரி அங்கு வந்த திமுகவினர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், சாயப்பட்டறைகளுக்கு ஆதரவக திமுகவினர் நடந்து கொள்வதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்று சாயகழிவுகளை காவிரி ஆற்றில் கலப்பதை தடுக்காவிட்டால் காவிரி ஆற்றின் நீரை குடிநீராகவும், விவசாயத்திற்கும், கால்நடைகளும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகும் என்பதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version