தீபாவளி பண்டிகையை ஒட்டி களைக்கட்டும் ஈரோடு ஜவுளி சந்தை – ஜவுளிகளின் விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

ஜி.எஸ்.டி மற்றும் நூல் விலை ஏற்றம் என பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும், ஈரோடு ஜவுளி சந்தையில் வெளி மாநிலத்தவர்களும், தமிழகத்தை சேர்ந்தவர்களும் ஜவுளிகளை கொள்முதல் செய்வதால் தீபாவளி பண்டிகை களைக்கட்டியுள்ளது.
ஈரோட்டில் நடைபெறும் ஜவுளி சந்தைகள் தென் இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் பெயர் பெற்றவை. ஜவுளி சந்தையில் வாரந்தோறும் 740 ஜவுளிக் கடைகளும், தினசரி 330 ஜவுளிக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. அனைத்து வகை ஜவுளி ரகங்களையும் குறைவான விலைக்கு விற்பனை செய்வதால், வெளி மாநில வியாபாரிகளும் இங்கு அதிக அளவில் வந்து வாங்கிச் செல்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கனிமார்க்கெட் ஜவுளிச் சந்தையில், வெளிமாநில ஜவுளி வியாபாரிகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வியாபாரிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால், விற்பனை களைக்கட்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஜி.எஸ்.டியால் ஜவுளிகளின் விலை அதிகமாக இருந்ததால், நான்கு ஆடைகள் வாங்கும் இடத்தில், ஒரு ஆடை மட்டுமே வாங்க முடிந்தாகவும், தற்பொழுது விலை குறைவாக இருப்பதால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆடைகளை வாங்க முடிவதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிகின்றனர்.

 

 

 

Exit mobile version