தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸின் வேட்பாளரான திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்புக் காரணமாக இயற்கை எய்தினார். அவர் இயற்கை எய்தியதை ஒட்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலானது வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த இடைத்தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட உள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வில்லரசம்பட்டி என்கிற ஊரில் அதிமுகவினைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டமானது தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கே.சி. கருப்பண்ணன், கே.வி. இராமலிங்கம் போன்றவர்கள் கலந்துகொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஜெயகுமார், பண்ணாரி சட்டமன்ற உறுப்பினர் சின்னரசு மற்றும் சிவசுப்பிரமணியன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்ய பாமா, செல்வகுமார், சின்னையன் மற்றும் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பி.சி. இராமசாமி உள்ளிட்ட பலர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கு அதிகமான பூத் கமிட்டி நபர்களும் கல்ந்து கொண்டார்கள்.
முன்னாள் அமைச்சர்கள் இந்த இரண்டாயிரம் பூத் கமிட்டி நபர்களுக்கு தேர்தலின் போது எவ்வாறு செயல் புரிய வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்கள். தேர்தலானது பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் நிலையில் மார்ச் இரண்டாவது வாரம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.