ஈரோடு கிழக்குத் தொகுதி – அதிமுக போட்டி!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸின் வேட்பாளரான திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்புக் காரணமாக இயற்கை எய்தினார். அவர் இயற்கை எய்தியதை ஒட்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலானது வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து அதிமுக கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தி யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றைக்கு ஈரோடு கிழக்குத் தொகுதியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து களமிறங்க உள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்று அதிமுகவின் விருப்பத்தினை தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது என்று  தமாகா தலைவர் ஜி.கே வாசன் மகிழ்ச்சியாக தெரிவித்தார். இத்தகவலை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அவர்கள் மகிழ்ச்சியாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது, இந்த அறிவிப்பானது தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் நலன் என்கிற அடிப்படையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும் தமாக தலைவர் ஜி.கே வாசனும் மற்றும் இதர  கூட்டணிக் கட்சி தலைவர்களின் ஒப்புதலுடன் ஒருமித்த கருத்தாக அனைவரும் ஏற்று வெளியிடப்பட்டிருக்கிறது, சமீபமாக இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லாமலும் ஆளுங்கட்சியினராலே பெண் காவலர்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவதுமான சீர்கேடுகள் அரங்கேறியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

மேற்கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அவர்கள், இந்த விடியா அரசு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை அலைக்கழித்து வருகிறது என்றும், விலைவாசி ஒருபுறம் உயர்ந்து வருகிறது மறுபுறம் அம்மாவின் நலத்திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு முடக்கி வருகிறது, இது மிகவும் கண்டனத்திற்குரிய விசயமாகும் என்றும் கூறினார். சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்றவற்றை உயர்த்தி மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது இந்த விடியாத அரசு என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் இந்த ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று தமாகா தலைவர் ஜி,கே வாசன் அறிவித்திருப்பது கூட்டணியின் ஒருமித்தக் கருத்தைக் காட்டுகிறது என்று கூறினார்.

Exit mobile version