ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி வாகை சூடும் – முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஈரோடு (கிழக்கு) சட்டம்னற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸின் வேட்பாளரான திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்புக் காரணமாக இயற்கை எய்தினார். அவர் இயற்கை எய்தியதை ஒட்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலானது வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இடைத்தேர்தலில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுன்னி தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பெங்களூரில் இருந்து வந்துள்ள பெல் நிறுவன பொறியாளர்கள் எட்டு பேர் முதல் கட்ட பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெல்லக்கூடும் என்று கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. காளிங்கராயனின் நினைவு தினத்தையொட்டி ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அவரது மணிமண்டபத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி வாகை சூடும் என்றும், இந்த வெற்றி தமிழகத்தில் திருப்புமுனையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன இவற்றில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version