ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுருந்தார். அந்த அறிக்கையின் படி, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக கழக உறுப்பினர்கள் விருப்பமனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதிவரையிலாக விருப்பமனுக்கள் வழங்கப்படும் என்று அவரின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதனையொட்டி விருப்ப மனு விநியோகமானது தொடங்கியுள்ளது.