ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மிகவும் பரபரப்பாக களைகட்டி வருகிறது. அதிமுகவின் வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு சூறாவளியாய் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் அதிமுக வெல்லும் என்பது தெளிவாகிறது. அதற்கான ஒரு சிறிய புள்ளிவிவரம் பின்வருமாறு உள்ளது.
அதிமுக ஆட்சியில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரத்தினை இலவசமாக சொன்னபடியே சரியாக கொடுத்தோம். ஆனால் இந்த விடியா ஆட்சியில் 1000 யூனிட் மின்சாரம் தருகிறோம் என்று சொல்லி அதனை இன்னும் செயல்படுத்தவில்லை. அதேபோல அதிமுக ஆட்சியில் கைத்தறி தொழிலாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் சொன்னபடியே கிடைத்தது. இந்த விடியா ஆட்சி 300 யூனிட் மின்சாரம் இலவசமாக தருகிறோம் என்று சொல்லி தரவேயில்லை. மின்சாரத்தின் கட்டணத்தை உயர்த்த மட்டும் செய்துள்ளார்கள். இது நெசவுத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயல். ஈரோடு கிழக்கை எடுத்துக்கொண்டால் விசைத்தறித் தொழிலாளர்களே அதிகம். கண்டிப்பாக நெசவு சார்ந்த மக்கள் திமுகவிற்கு உரிய பாடத்தை புகட்டுவார்கள்.
பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை அதிமுக ஆட்சியில் ஒழுங்காக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. ஆனால் விடியா ஆட்சியினர் இலவச வேட்டி சேலையினை தருவதற்கு தாமதம் காட்டுகிறார்கள். அதேபோல மாணவர்களுக்கு இலவச சீருடை அதிமுக ஆட்சியில் சரியாக கொடுக்கப்பட்டது. நூல்களின் விலை கட்டுக்குள் இருந்தது. ஆனால் விடியா ஆட்சியில் நூலின் விலை கடும் உயர்வினை சந்தித்துள்ளது. மேலும் தரமற்ற நூல் விநியோகம் இந்த விடியா ஆட்சியில் நடக்கிறது. இலவச மடிக்கணினி அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. ஆனால் அதனை இந்த விடியா ஆட்சி தொடர்ந்து செயல்படுத்தவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வெற்றி வேட்பாளர் K.S.தென்னரசு அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பீர்
தேர்தல் நாள் : 27-2-2023#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு #ஈரோடுகிழக்கு #ErodeByElection#ErodeEast #AIADMK #ErodeEast4AIADMK pic.twitter.com/e0kye2YBdg— AIADMK IT WING KOVAI URBAN District (@ITWingKovai) February 14, 2023