ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, அதிமுகவின் மனு தொடர்பாக 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் அசாதாரண சூழலாக மாறி இருப்பதால் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க காலதாமதம் செய்ய வேண்டாம் எனவும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் 3 நாட்களில் பதில் அளிக்கவும், தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.