ஆட்சி மாறும்; காட்சி மாறும்! – எதிர்கட்சித் தலைவர் எழுச்சியுரை (பாகம் இரண்டு)

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலினை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். அதன் இரண்டாவது பாகம் இது.

அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசினை ஆதரித்து பேசிய அவர், ஈரோட்டில் ஏரிகள் தூர்வாரப்பட்டன. பல நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஒரு சொட்டு மழைநீரினைக்கூட வீணாக்காமல் பாதுகாத்த அரசு அம்மாவின் அரசு என்று குறிப்பிட்டார். ஆனால் இந்த விடியா திமுக அரசு எந்தவித நலத்திட்டங்களையும் ஈரோட்டிற்கு செய்யவில்லை. மேலும் திமுகவின் அமைச்சர் ஒருவர் இந்த ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்காமல் நிதி சேகரித்து வருகிறார். நிதி சேகரித்தால் தான் அந்தக் கட்சியில் அவருக்கு இடம். ஆக நிதி சேகரித்து மக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் இருப்பவர்கள்தான் திமுக அமைச்சர்கள். இன்றைக்கு கூட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் திமுகவினர் பொதுமக்களைத் திரட்டி ஆயிரம் ரூபாய் பணமும் பிரியாணியும் வழங்கி வருகிறார்கள். இதனை காவல்துறையினரும் தேர்தல் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் திமுக மாவட்ட செயலாளர்கள் போல நடந்துகொள்கிறார்கள்.

மேலும் திமுகவினர் தங்களின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரை களம் இறக்காமல், கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை போட்டியிட வைத்திருப்பது அவர்களின் தோல்வி பயத்தைக் காண்பிக்கிறது என்று எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். ஆட்சி மாறும் காட்சி மாறும். அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்ட எதிர்கட்சித் தலைவர், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும் என்றார். நடுநிலை தவறும் அரசு அதிகாரிகளுக்கு ஒன்றினை எச்சரிக்கையாக சொல்லிக்கொள்ள விழைகிறேன்.  பழமொழி ஒன்று சொல்வார்கள் சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமாம். கல்யாணம் நின்றுவிடாது. அதேபோல வாக்காளனை ஒளித்து வைப்பதன் மூலம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றியினைத் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

நமது ஆட்சியில் கட்டப்பட்ட பல கட்டிடங்களை இப்போதைய முதல்வர் ரிப்பன் கட் செய்து திறந்து வைக்கிறார். மேலும் நமது நலத்திட்டங்கள் பலவற்றை திமுக முட்க்கி வருகிறது. பதவியில் இருக்கும் தகுதியற்ற முதலமைச்சர் நாட்டை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்று எல்லாத் துறையுமே சீரழிந்தும் வருகிறது. அதற்கு முழுமுதல் காரணம் திறமையற்ற இந்த முதல்வர் என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.

(தொடரும்…)

Exit mobile version