கடந்த சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வினை ரத்து செய்து, உரிய முறையில் மறுதேர்வினை நடத்திட வேண்டும் என்று தமிழக அரசினை வலியுறுத்தும் விதமாய் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தன்னுடைய சுட்டுரைப் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவரின் பதிவு பின்வருமாறு உள்ளது.
தமிழ்நாட்டில் 25.02.23 – சனிக்கிழமை நடைபெற்ற TNPSC தேர்வில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததன் காரணமாக பல்வேறு குளறுபடிகளுடன் தாமாதமாக தொடங்கியுள்ளன. இதனால் பல முறைகேடுகள் நடந்துள்ளது,அதன் காரணமாக தகுதிவாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.TNPSC தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக 25.02.23 நடைப்பெற்ற தேர்வை ரத்துசெய்து, வேறு ஒருநாளில், உரிய முறையில் மறுதேர்வினை நடத்திட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டில் 25.02.23 – சனிக்கிழமை நடைபெற்ற TNPSC தேர்வில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததன் காரணமாக பல்வேறு குளறுபடிகளுடன் தாமாதமாக தொடங்கியுள்ளன. இதனால் பல முறைகேடுகள் நடந்துள்ளது,அதன் காரணமாக தகுதிவாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.1/2
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) February 27, 2023