முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் துர்நாற்றம் வீசும் குடிநீர்! பொதுமக்கள் அதிருப்தி!

முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதி தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்கள் பார்வைக்கு விஐபி தொகுதியாக காணப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தொகுதி என்றாலே அனைத்து வசதிகளுக்கும் பொதுமக்களுக்கு எளிதில் கிடைத்துவிடும் என்பது அனைவராலும் நம்பப்படுகிறது. ஆனால் அங்கு இருக்கும் நிலை தலைகீழாக தான் இருக்கிறது தொகுதி முழுவதும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கிறோம் என்ற பெயரில் தொகுதியை பள்ளத்தாக்காத மாற்றி இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் மழை நீர் வடிகால் கால்வாய் பள்ளங்கள் வெட்டப்பட்டு அறையும் குறையுமாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

எங்கு சென்றாலும் துண்டும் குடிமான சாலைகள் என கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் நிலையை விட மோசமான நிலையில் குளத்தூர் தொகுதி இருந்து வருகிறது.

மக்களுக்கு தேவை சுத்தமான காற்று சுகாதாரமான குடிநீர் ஆனால் கொளத்தூர் தொகுதியில் முற்றிலும் இயற்கைக்கு மாறாக பொதுமக்கள் நலனில் அக்கறை கொள்ளாத வகையில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, குளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி கே எம் காலனியில் 40க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள் வசதி படைத்தவர்கள் முதல் அன்றாட கூலித்தொழிலாளர்கள் வரை ஜிகே முக்கால் அணியில் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள 26 வது தெரு முதல் பல்வேறு தெருக்களில் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை குறிப்பாக சென்னை குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீர் கழிவுநீர் கலந்து வருகிறது.

கடந்த பல மாதங்களாக இப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருவதால் முகர்ந்து பார்க்கவே முடியாத நிலை ஏற்படுகிறது. குடிநீர் குழாய் கழிவு நீர் குழாயா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் குழாய்களில் வரும் குடிநீர் கருப்பு நிறத்தில் வருகிறது. பலமுறை புகார் கொடுத்தும் முதலமைச்சர் தொகுதி என்று கூட அக்கறையில்லாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகிறார்கள். முதலமைச்சர் தொகுதியிலேயே சுத்தமான குடிநீர் வரவில்லை என்றால் தமிழகத்தில் மற்ற தொகுதிகளில் மக்களின் நிலை என்ன என்பது இதன் மூலம் புலப்படுகிறது.

குடிக்க மட்டுமில்லாமல் சமைப்பதற்கும் கேன் தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்துவதால் ஒரு மாதத்திற்கு 2000 ரூபாய் வரை தண்ணீருக்கு மட்டும் செலவழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதே போல தான் ஜி கே எம் காலனி முழுவதும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஸ்டாலினும் அதிகாரிகளும் கண்டும் காணாதது போல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது மட்டுமில்லாமல் தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருவதாகவும் தினமும் சாலைகளில் நடந்து செல்லவே அச்சப்படக்கூடிய வகையில் குண்டும் குழியுமாக இருக்கக்கூடிய சாலைகள் ஒருபுறம் என கொளத்தூர் பகுதி மக்களே சிக்கி சின்னாபின்னம் ஆகி வருகிறார்கள். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மாதத்திற்கு இரண்டு முறை முதல் மூன்று முறை வரை நடத்திட்டோம் என்ற பெயரில் ஃபோட்டோ நடத்தி வருவது தான் முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதி மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்கள் என்ற பெயரில் ஏமாற்றி வருவதை வாடிக்கையாகக் கொண்டது தான் திராவிட மாடல் ஆட்சியாக பார்க்கப்படுகிறது.

Exit mobile version