அதிமுக திட்டங்களுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் – எதிர்கட்சித்தலைவர் பிரச்சாரம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி இன்றைக்கு மூன்றாவது நாளாக பிரச்சாரத்தினை மேற்கொண்டுள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள். இன்றைக்கு ஈரோடு கிழக்குத் தொகுதில் உள்ள தேர்முட்டி பகுதியில் பிரச்சாரத்தினை தொடக்கமாக மேற்கொண்டுள்ளார். அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசினை ஆதரித்து இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள எதிர்கட்சித்தலைவர், வெற்றிச் சின்னமான இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். நம்முடைய கூட்டணி வெற்றி வேட்பளார் மற்றும் இரண்டு முறை இந்தத் தொகுதில் வென்றவர் அருமை சகோதரர் கே.எஸ்.தென்னரசு. அவரை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.

அதிமுக ஆட்சியில் கே.எஸ்.தென்னரசு அவர்கள் ஈரோட்டில் குடிநீர் சரியில்லை என்று சொன்னதற்கு இணங்க அவரின் கோரிக்கையை ஏற்று நமது அம்மா அரசு 484 கோடியில் ஊராட்சிக்கோட்டையில் இருந்து காவிரி நீரைக் கொண்டுவந்து மிகப்பெரிய குடிநீர்த்தொட்டிக் கட்டப்பட்டது. மேலும் காவிரி ஆற்றின் குறூக்கே பாலம் கட்டப்பட்டது. 80 கோடி ரூபாயில் சூப்பர் ஸ்பாசிலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டது. அரசு மருத்துவமனையில் 61 கோடி ரூபாய்க்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டது. இதுபோன்ற பலத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 21 மாத ஆட்சிகாலத்தில் திமுக அதிமுகவின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறது. திமுகவினர் ஏழை மக்களுக்காக எதையுமே செய்யவில்லை.  வாரிசு அரசியலை செய்து வருவதே முழுநேரப் பணியாக ஸ்டாலின் செய்து வருகிறார். 21 மாத ஆட்சிகாலத்தில் எதையும் செய்யாமால் வீடுவீடாய் வந்து ஓட்டு மட்டும் கேட்கிறார்கள்.

அமைச்சர்கள் கமிஷன் கலெக்சன் கரெப்சன் என்றுதான் உள்ளார்கள். அமைச்சர்கள் ரவுடிசத்தில் ஈடுபடுகிறார்கள். ஒட்டகத்தில் போய் ஓட்டு கேட்கிறார்கள், ஒரு மந்திரி ஓடிப்போய் ஓட்டுக்கேட்கிறார். நமது மின்சாரத்துறை மந்திரி மக்களுக்கு பரிசு ஒன்றினை வழங்கியிருக்கிறார். அது மின் கட்டணத்தை உயர்த்தியதுதான். ஓட்டுப்போட்டதற்கு தண்டனையாக அனைத்திற்கும் வரியினை உயர்த்திவிட்டனர். ஆக மக்களின் துன்பத்தைப் பற்றியும் பொருளாதார சூழல் பற்றியும் தெரியாமல் செயல்படுகிறார்கள் ஆளும் கட்சியினர். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது அதிமுக அரசு. பல்வேறு செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு அமைத்துக்கொடுத்தது அதிமுக அரசு என்று தொடர்ந்து பேசினார் எதிர்கட்சித் தலைவர்.

Exit mobile version