மூன்றாம் நாள் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கினார் எதிர்கட்சித் தலைவர்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி இன்றைக்கு மூன்றாவது நாளாக பிரச்சாரத்தினை மேற்கொண்டுள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள். இன்றைக்கு ஈரோடு கிழக்குத் தொகுதில் உள்ள ராஜகோபால் தோட்டம் பகுதியில் பிரச்சாரத்தினை தொடக்கமாக மேற்கொண்டுள்ளார். அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசினை ஆதரித்து இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள எதிர்கட்சித்தலைவர், வெற்றிச் சின்னமான இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை ஈரோட்டிற்கு கொண்டுவந்துள்ளது. ஆனால் திமுக 21 மாத ஆட்சிகாலத்தில் எந்த நலத் திட்டத்தினையும் ஈரோட்டிற்கு கொண்டு வரவில்லை. ராஜகோபால் தோட்டம் பகுதியில் 2 கோடியில் சாலை போடப்பட்டது. ஈரோட்டில் அடிக்கடி மழைபெய்து கரண்ட் போவதால் பூமிக்கடியில் 80 கோடி ரூபாயில் கேபிள் அமைத்து மின்சாரம் விநியோகம் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டது. 54 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டது. நேதாஜி  மார்கெட் 30கோடி ரூபாயில் கட்டப்பட்டது. வ.உ.சி பார்க் 6 கோடி ரூபாயில் சிறுவர்களுக்காக கட்டிக்கொடுக்கப்பட்டது. 25 கோடியில் ஈரோடு முழுக்க எல்.இ.டி விளக்குப் பொருத்தப்பட்டது. அங்காடி வளாகம், பன்னீர் செல்வம் பார்க்கில் 52 கோடி ரூபாயில் கட்டப்பட்டது. கோவை மாவட்டத்தினைப் பிரித்து ஈரோடு மாவட்டம் அதிமுக ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி கூடுதல் கட்டிடம் 4 அரை கோடியில் கட்டப்பட்டது.

ஆனால் திமுகவினர் இன்று வாக்காளர்களை அடைத்து வைக்கிறார்கள். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. சீப்பை ஒளித்துவைத்து விட்டால் திருமணம் நின்றுவிடுமா? அதுபோல வாக்காளர்களை அடைத்துவைத்தாலும் வெல்லப்போவது அதிமுகதான். திமுகவின் இந்தச் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் ஸ்டாலின் தன் தந்தைக்கு கடலில் பேனா வைக்கிறார். அதுவும் 81 கோடி ரூபாயில் எழுதாத பேனாவை கடலில் வைக்கிறார். எழுதும் பேனாவை மாணவர்களுக்கு கொடுத்தால் கூட புண்ணியம் கிடைக்கும். மேலும் 520 வாக்குறுதிகள் கூறியிருக்கிறார். அதுவும் அதில் 85% நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்கிறார். இது பச்சைப்பொய். இந்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட உருப்படியாக நிறைவேற்றவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கூறினார். ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

Exit mobile version