தேர்தல் அதிகாரிகளை எச்சரிக்கிறேன்.. அவர்கள் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும் – எதிர்கட்சித் தலைவர் பிரச்சாரம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசினை ஆதரித்து கழகத்தின் இடைக்கால பொதுசெயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் நெரிகல்மேடு பகுதியில் தற்போது தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்களுக்கு வெற்றிச் சின்னமான இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி அடையச் செய்யுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

திமுகவினர் வேண்டுமென்றெ என்னைத் தடுத்து நிறுத்துகிறார்கள். 6.30 மணிக்கு இந்தப் பகுதியில் எனக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு நேரம் தரப்பட்டுள்ளது. ஆனால் திமுக எம்பி கனிமொழி 4.30 மணிக்கு பேச வேண்டியவர். ஆனால் தற்போது வரை 7.30 மணி வரை பேசுகிறார். அனைவருக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்ய வாய்ப்புத் தரவேண்டும். ஆனால் திமுக அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். மக்களை அடைத்து வைத்து ஓட்டு கேட்பதை ஆதரத்துடன் தெரிவித்தால் தேர்தல் அதிகாரிகள் இல்லை என்று மழுப்புகிறார்கள். பச்சைப்பொய் சொல்கிறார்கள். நான் தேர்தல் அதிகாரிகளை எச்சரிக்கிறேன். அவர்கள் ஒருதலைபட்சமாக இல்லாமல் நடுநிலைமையுடன் பணிபுரியவேண்டும். எந்த இடையூறு வந்தாலும் வெல்லப்போவது அதிமுக தான். கே.எஸ். தென்னரசு வெல்வது உறுதி. விடியா திமுக ஆட்சியில் அதிமுகவின் அனைத்து திட்டங்களையும் முடக்கி வைத்துள்ளார்கள். மின்கட்டண உயர்வு, நெசவாளர்களுக்கு சரியாக மின்விநியோகம் செய்யவில்லை, வீட்டுவரி, கடை வரி என்று அனைத்தையும் அதிகப்படுத்திவிட்டது. வாக்குறுதிகளை மீறி செயல்படும் ஆட்சி திமுக ஆட்சி.

கொரோனாத் தொற்றுக்காலத்தில் விலையில்லா அரிசி, சக்கரை, பாமாயில், பருப்பு என்று எல்லாமே இலவசமாக நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு விநியோகித்தோம். பொங்கல் தொகுப்பினை சரியாக மக்களிடையே கொண்டு செலுத்தினோம். ஆனால் இதனை சரிவர செய்யாமல் இருக்கிறது திமுக அரசு. பெண்களுக்கு 1000 ரூபாய் தருவேன் என்று சொல்லி தரவில்லை. பொய்யைச் சொல்லி ஆட்சியில் ஏறியுள்ளார்கள். இதுவெல்லாம் மிகவும் அபத்தமான விசயம் என்று பெசினார் எதிர்கட்சித் தலைவர். மேலும் வாக்காளர்கள் மீது திமுகவிற்கு நம்பிக்கையில்லை. அடைத்து வைக்காமல் திறந்துவிட்டால் அதிமுகவிற்கு ஓட்டுப்போட்டுவிடுவார்கள் என்று பயம். திமுகவிடம் காசு வாங்கிக்கொள்ளுங்கள், அதிமுகவிற்கு ஓட்டைச் செலுத்துங்கள் என்று எதிர்கட்சித் தலைவர் பிரச்சாரம் செய்தார்.

Exit mobile version