திமுக ஆட்சியில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை – ஈரோடு கிழக்கு பிரச்சாரத்தில் எதிர்கட்சித் தலைவர்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி அதிமுக சார்பாக கழக இடைக்கால பொதுசெயலாளர் தலைமையில் அவரது பேராதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பொருட்டு இன்று எதிர்கட்சித் தலைவரும் கழகத்தின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சூறாவளி வீரப்பன்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மக்கள் அலையென திரண்டு அவருக்கு வரவேற்பினை அளித்து வருகிறார்கள். மலர்கள் தூவி அவருக்கு நல்ல வரவேற்பினை பொதுமக்கள் நல்கினர். ஈரோடு தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்டங்களை கூறிய வண்ணம் அவர் பிரச்சாரத்தினைத் தொடங்கினார். அதிமுக ஆட்சியில் ஈரோட்டிற்காக பிரம்மாண்ட குடிநீர் திட்டத்தினை அறிமுக செய்து வைத்தது நமது அதிமுக ஆட்சி என்று பேசினார் எதிர்கட்சித் தலைவர். பாதுகாக்கப்பட்ட காவிரி நீரினை ஈரோட்டு மக்களுக்கு வழங்கியது நமது அரசாங்கம்.  அதேபோல ஈரோட்டில் உள்ள  சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 81 கோடி ரூபாயில் கட்டப்பட்டது மற்றும் 61 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.  ஈரோடு மாநகரத்தில் மின்சார கேபில் 80 கோடி ரூபாயில் அமைத்துக் கொடுத்தோம். ஈரோடு பேருந்து நிலையம் 42 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது. நேதாஜி தினசர் மார்கெட் 52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. பெரும்பள்ளம் ஓடைக்கு சுவர் எழுப்பியது அதிமுக ஆட்சியில்தான்.

திமுக ஆட்சியில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஒரு அமைச்சர் கூ-ட உங்களை வந்து சந்திக்கவில்லை. இப்போது தேர்தல் வந்தவுடன் வீதிவீதியாக வந்து புரோட்டா சுடுகிறார்கள். எந்த அமைச்சரும் மக்களின் குரலைக் கேட்கவில்லை. ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று திமுகவினர் வீதிவீதியாக வந்து மக்களை சந்திக்கிறார்கள். இத்தனை இலாக்காக்கள் கொண்ட அமைச்சர்கள் ஒரு நல்ல திட்டத்தைக் கூட ஈரோடு மக்களுக்கு வழங்கவில்லை. கிரமாங்களில் ஆடு மாடுகளை அடைத்து வைப்பார்கள் அதுபோல நமது ஏழை வாக்காளர் பெருமக்களை விலைக்கு வாங்கி தேர்தலை சந்திக்கிறார்கள். அவர்கள் மீசை வைத்த சரியான ஆண்மகனாக இருந்தால் அடைத்து வைத்தவர்களை வெளியே விட்டு தேர்தலை சந்திக்க முடியுமா என்று எதிர்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார். அண்ணா திமுகவை எதிர்க்க திராணியில்லை. நான் வந்ததால் 2000 ரூபாய் கொடுத்து பிரியாணி கொடுத்து மக்களை அடைத்து வைத்திருக்கின்றனர். என்னால் மக்களுக்கு காசு கிடைத்தது மகிழ்ச்சிதான். மக்கள் காசு மக்களுக்கே கிடைத்துவிட்டது. காசை திமுகவிடம் வாங்கிக் கொள்ளுங்கள், ஓட்டை அதிமுகவிற்கு போடுங்கள் என்று எதிர்கட்சித் தலைவர் பேசினார்.

Exit mobile version