‘துணிவிருந்தால் தேர்தலை நேரடியாக சந்திக்கவும்’- பிரச்சாரத்தில் வாக்கு சேகரிக்கும் எதிர்கட்சித் தலைவர்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசினை ஆதரித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வெட்டுகாட்டு வலசு பகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தை ஆரம்பித்த அவர் மக்களைப் பார்த்து நம்முடைய சின்னம் இரட்டை இலை, புரட்சித்தலைவரின் சின்னம் இரட்டை இலை, புரட்சித் தலைவி அம்மாவின் சின்னம் இரட்டை இலை என்று கூற, மக்களும் நம்முடைய சின்னம் இரட்டை இலை என்று பலமாக கத்தி ஆரவாரம் எழுப்பினார்கள்.

தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் அவர்கள், தேர்தல் அறிவித்ததிலிருந்து அமைச்சர்கள் வீதிவீதியாக வந்து வாக்கு சேகரிக்கிறார்கள்.அவர்களுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. காங்கிரஸ் தனது தோல்வியை உணர ஆரம்பித்துவிட்டது. திமுக ஆட்சி அமைத்து 520 வாக்குகள் கூறி எதையுமே செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்று பேசினார்.  தேர்தலை நேரடியாக சந்திக்க திராணி திமுகவிடம் இல்லை. துணிவிருந்தால் நேரடியாக தேர்தலை சந்திக்கவும், மேலும் வாக்காளர்களை அடைத்து வைத்து வாக்குகளை சேகரிக்கும் அரசியலில் ஈடுபடுவது மிகப்பெரிய அவலம் மற்றும் கேவலம் என்று கூறிய அவர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டு விடைபெற்றார்.

Exit mobile version