அதிமுக சார்பாக மதுரையில் நடைபெற்ற வீர வரலாற்றிம் எழுச்சி மாநாட்டினை அனத் கொண்டு சென்ற ஊடக நணபர்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்றைய தினம் சேலத்தில் இருந்து மதுரை வந்து மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, உங்களை சந்திக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பின்வருமாறு தன்னுடைய கருத்துகளை தெரிவித்தார்.
கொடநாடு விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,
சட்டமன்றத்திலேயே இதனை முதலைச்சர் சொல்லியிருக்கலாமே, திமுக ஆட்சிகாலத்தில் எத்தனை சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் நாட்டில் எவ்வளவோ சம்பவம் நடைபெற்று உள்ளது, ஆனால் அதிமுக ஆட்சிகாலத்தில் நடைபெற்ற ஒரே சம்பவத்தை மட்டும் தொடர்ந்து பேசுவது ஏன்? கொடநாடு சம்பவத்தில் ஈடுபட்ட அந்தக் குற்றவாளிகளை சிறை எடுத்தது அதிமுகதான். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வாதாடியது திமுக அமைச்சர்தான். இந்தக் குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரராக இருந்தது திமுகக்காரர்தான். சிபிஐடி க்கு இந்த வழக்கை கொண்டு செல்லுங்கள். இந்த ஜாமீன் தாரருக்கும் குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம்? இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே, அவர்கள் கொடும் குற்றம் செய்த குற்றவாளிகள். இவர்களை ஜாமீனில் எடுக்க திமுக முனைப்புக் காட்டியது ஏன்? ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக, விசாரணை கமிஷன் அமைத்து நீதிமன்றத்தில் சுமார் 790 பக்கம் தாக்கல் செய்ததாகவும், வழக்கு முடிந்துவிட்டதாகவும் தகவல். சிபிசிஐடி க்கு இந்த வழக்கை கொண்டுசெல்லுங்கள்.
காவிரி விவகாரம் தொடர்பாக,
அதாவது, ஏற்கனவே அம்மா ஆட்சியில் சட்டப் போரட்டம் நடத்தி காவிரி பிரச்சினை தீர்வு காணப்பட்டது. மாதமாதம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கான டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு அனுப்ப காரணமாக இருந்தது அதிமுக. அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாட்கள் போராட்டம் நடத்தி நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தோம். திமுகவினர் என்ன செய்திருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர்ன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம் என்ற பழமொழி போல் கர்நாடகா சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் வரவேற்றார். அப்போது காவிரி நதிநீர்ப் பிரச்சனையைப் பற்றி பேசுவது என்ன தவறா?
அதிமுக எப்போது அடிமை கிடையாது. எந்தக் கட்சிக்கும் அடிமை கிடையாது. திமுகதான் அடிமை. அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும். நாட்டுமக்களைப் பற்றி கவலையில்லை.
நீட் விவகாரம் தொடர்பாக,
நீட் தேர்வு ரகசியம் தெரியும் என்று உதயநிதி கூறினார். ஆட்சிக்கு வரும்போது ஒரு பேச்சு. இப்போது ஒரு பேச்சு. 2010 ல் காங்கிரஸ் ஆட்சியில்தான் முதன்முதலாக நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை உதயநிதி கூட ஒப்புக்கொண்டார். அன்றைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்தி செல்வம். ஆக நீட்டைக் கொண்டுவந்ததே திமுக தான்.
தேர்தல் பயத்தினால்தானே குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று சொல்கிறார்கள். இரண்டுவருடமாக கும்பகர்ணத் தூக்கம் போட்டுக்கொண்டுவந்தார்கள். மின்கட்டணம், பத்திரப்பதிவு கட்டணத்தைக் குறைக்க சொல்லுங்கள். அத்தியாவசியப் பொருட்கள் 40 சதவீதம் விலை குறைந்துவிட்டது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்தப் பாடத்தினை திமுகவிற்கு புகட்டுவார்கள். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தனது கருத்துகளை தெரிவித்தார்.
Discussion about this post