நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் இல்லத் திருமண விழாவில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
நாமக்கல் மாவட்டம் குமாராபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் சகோதரர் தங்கராஜ் அவர்களின் இல்லத் திருமணவிழா நடைபெற்றது. இதனையொட்டி எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குமாரபாளையம் வந்தபோது நாமக்கல் அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கினார்கள். பிறகு மணமகன் வினோதன், மணமகள் மோனிகா ஸ்ரீ ஆகிய இருவரையும் வாழ்த்தினார். மேலும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் போன்றோர் கலந்துகொண்டனர்.